வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! அதே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

0
223

இந்தியாவை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் கடைசியில் இருந்து மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்த எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

இந்த சூழ்நிலையில், தொடர்ச்சியாக 11வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்சமயம் தொடர்ந்து 11 தினங்களாக எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வருகிறது.

Previous articleஅமளியின் நடுவே நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய மசோதாக்கள்!
Next articleவிபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here