முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! சுறுசுறுப்பான அதிகாரிகள்!

Photo of author

By Sakthi

தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய தொழிற் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்தல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பதிவுகளை தேவைப்படும் பகுதிகளில் ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

புதிய வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கென்று அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொழிற்சாலைகளின் எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களில் பயிற்சி மற்றும் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

நலத்திட்ட உதவிகள் கேட்கும் மனுக்களின் மீதான கோரிக்கைகளுக்கு மிக விரைவாக தீர்வை கண்டு பயனாளிகளுக்கான பலன்கள் நலத்திட்ட உதவிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சேவைகளை ஒன்றிணைத்து மிக அதிக வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்காக கைபேசி செயலி உருவாக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

அரசின் திறன் மேம்பாடு தொடர்பான திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய வேண்டும் அதற்கான அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும். வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி க்ளவுட், கம்ப்யூட்டிங் 3d பிரின்டிங், சைபர்செகரிடி, உள்ளிட்டவற்றில் திறன் பயிற்சி வழங்க வேண்டும் அதேபோல தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு கற்று தரவேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையுடன் ஒன்றிணைந்து மகளிர் கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பது தொடர்பாக திறன் பயிற்சி கொடுக்க வேண்டும். மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்டு இருக்கின்றார்.அதிக அளவிலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பயன்படும் விதத்தில் வேலைவாய்ப்பு துறையினால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும்.

அதேபோல தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் மூலமாக அதிகமான தொழிலாளர்கள் இருக்கின்ற பகுதிகளில் மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதியை ஏற்படுத்த வேண்டும் கூடுதலாக ஆயுஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.