தொடர்ச்சியாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

0
187

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

இந்தநிலையில் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த சில வாரங்களாக மாற்றங்கள் எதுவும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதாவது கடந்த 12 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102. 49 காசுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக இதே நிலை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

Previous articleமுதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! சுறுசுறுப்பான அதிகாரிகள்!
Next articleவானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here