பரபரப்பான கேள்வியை கேட்ட பத்திரிக்கையாளர்! கூலாக பதில் சொன்ன ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணிமுதல் அதிமுகவினர் எல்லோரும் அவர்களுடைய இல்லத்தில் பதாகை ஏந்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஓபிஎஸ் உரையாற்றிய சமயத்தில் அண்ணாச்சி, அண்ணாச்சி, சொன்னதெல்லாம் என்னாச்சு நீட் தேர்வை ரத்து செய்யப்படும், பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், குடும்ப பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்திற்கு இடையே பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதிலும் குறிப்பாக செய்தியாளர் ஒருவர் மிகவும் பலம் வாய்ந்ததாக சொல்லப்படும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு உடனே பதில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் அதே பலம் வாய்ந்த அதிமுகவின் பொதுக்குழு தான் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனிநபர், தனிக்குடும்பம், கட்சியில் தங்களுடைய ஆளுமையை செலுத்தி விட இயலாது என்ற ஒரு சூழலை நான்கு வருடங்களுக்கு முன்னரே நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.அத்துடன் யார் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதிமுகவை கைப்பற்ற இயலாது என்பதை மிகவும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக பத்திரிக்கையாளர் ஒருவர் சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களுடன் உரையாடும்போது நான் அதிமுகவிற்கு மீண்டும் வருகை தருவேன் என்று தெரிவித்திருப்பது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? அவர் மீண்டும் அதிமுகவில் காலடி எடுத்து வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அந்த சமயத்தில் பதிலளித்த ஓபிஎஸ் சசிகலா அதிமுகவில் மீண்டும் வருவதாக நீங்கள் தெரிவிக்கின்ற கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.