கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் பசவராஜ் பொம்மை!

Photo of author

By Sakthi

கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டார். கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்த பிஎஸ் எடியூரப்பா தீர்ப்பை 78 வயது நிறைவடைந்த காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் மேலிட உத்தரவின் பெயரில் நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதற்கு உட்கட்சிப் பூசலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது இந்த சூழ்நிலையில், கர்நாடகாவிற்கு அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்து வந்தது.

புதிய முதலமைச்சர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கிசன் ரெட்டி, கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் உள்ளிட்டோர் மேலிட பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் இருக்கின்ற நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்றைய தினம் மாலை ஏழு முப்பது மணி அளவில் தர்மேந்திர பிரதான் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் கட்சியின் மாநில தலைவர் நவீன் குமார் கட்டில் மேலிட பார்வையாளர் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மையின் பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். இதனை சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தர்மேந்திர பிரதான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஐ சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார் பசவராஜ் பொம்மை இதனை ஏற்றுக்கொண்ட ஆளுனர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன் காரணமாக, இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்த விழாவில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பசவராஜ் அவர்களுக்கு ஆளுநர் மற்றும் எடியூரப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள். புதிய முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை பசவராஜ் பொம்மை பிரதமரை சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்சமயம் கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கின்ற பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ் ஆர் பொம்மை 1988 மற்றும் 89 களில் கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர் இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும், ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அரசுகளை கலைப்பதற்கு மத்திய அரசு பயன்படுத்திவந்த 356 ஆவது சட்டப்பிரிவு க்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பது இது இரண்டாவது முறை என்று சொல்லப்படுகிறது.