19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

0
67
The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!
The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட ஒரு கும்பல் டெல்லியில் செயல்பட்ட மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்.

தங்களது மோசடி விளையாட்டை ஆசிரியரிடம் ஆரம்பித்துள்ளனர். ஆசிரியர் சுதா நன்றாக இந்தி பேசுவார். அவர் ஹிந்தி பேசுவதை தனக்கு சாதகமாக வைத்து டெல்லி மோசடி கும்பல் சுதாவிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு இந்தியில் பேசி தங்களது சதி வலையை அரங்கேற்றியுள்ளது. ஆசிரியை சுதாவிடம் பேசிய டெல்லி மோசடி ஆசாமிகள் உங்கள் கணவருக்கு மேலும் 19 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வர வேண்டி உள்ளதாகவும், அதை நாங்கள் வாங்கித் தருகிறோம் என்றும் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசியுள்ளார்கள்.

அதை உண்மை என்று நம்பிய ஆசிரியையும், அதற்காக மோசடி நபர்கள் சொன்னபடி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். 19 லட்சம் வாங்குவதற்கு முன் பணம் கட்ட வேண்டும் என்றும் அதை நாங்கள் திருப்பித் தந்து விடுவோம் என்றும், ஆசிரியரிடம் பேசிய மோசடி நபர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ஆசிரியை சுதாவும், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டரை கோடி வரை பணம் செலுத்தி விட்டார். பணம் திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆசிரியை மோசடி கும்பல் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மோசடி நபர்கள் சுதாவிடம் பேசுவதை மொத்தமாக நிறுத்திக் கொண்டனர். அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை சுதா எல்ஐசி நிறுவனத்திற்கு நேரிலேயே சென்று விசாரித்தார். அப்போதுதான் மோசடி கும்பல் சொன்னது அத்தனையும் பொய் என்று அவருக்கு தெரிய வந்தது. இந்த நூதன முறையில் டெல்லி கும்பல் சுதாவை ஏமாற்றிவிட்டனர்.

மோசடி ஆசாமிகள் எல்ஐசி நிறுவனத்திலிருந்து பேசுவது போல பேசி இந்த மோசடியில் லீலையையும் அரங்கேற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து மோசம் போனது பற்றி ஆசிரியை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

எனவே மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாக ஜோதி, ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டு, தனிப்படை போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த டெல்லி ஆசாமிகள் 6 பேரை ஏற்கனவே பிடித்துவிட்டனர். இருந்தபோதும் இந்த மோசடியில் ஈடுபட்ட சிம்ரன்ஜித் சர்மா என்ற 29 வயது பெண், போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அவரை தேடிவந்த போலீசார் நேற்று முன்தினம் டெல்லியில் அவரை கைது செய்தனர். அவர் டெல்லியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் வேலை பார்த்து வந்தவர் என்றும் மோசடி கும்பலுடன் சேர்ந்து தற்போது செயல்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்காக அவருக்கு பல லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட இந்த பெண் நேற்று நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.