கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஆறு மாத காலம் ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் ஊரடங்கு தளர்விலும் மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அரசாங்கம் இத்தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்கள் அதிக அளவு பாதிக்கப்படாவிட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது.
இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்தது என்பது குறிப்பிடத்தக்கத்து.மேலும் நமது தமிழ்நாட்டில் அதிகளவு தொற்று பாதிப்பு காணப்பட்டதால் மக்கள் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகள் இன்றி அவதிக்குள்ளாகினர்.அவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா சிகிச்சை முகாம்களை தொடங்கினர்.
மேலும் கொரொனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் தற்பொழுது ஏற்பட்டது.இருப்பினும் மக்கள் பலர் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதனையடுத்து கொரோனா முதல்,இரண்டாம் அலையை கடந்து தற்போது மூன்றாவது அலை உருவாகக் கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.அவ்வாறு உருவாகும் பொழுது அவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கமும் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
பக்தர்கள் நோய்கள் அகலவும் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவும் பல சிறப்பு பூஜைகளை நடத்துவர்.பல நெய் வெய்தியங்களும் சாமிக்கு படைக்கப்படும்.ஆனால் தற்போதைய பகதர்கள் புதிய முறையை கையாண்டுள்ளனர்.பெங்களூரில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் மூன்றாவது அலை மக்களை பாதிக்காமல் இருக்க சிறப்பு பூஜை ஒன்று நடைபெற்றது.அந்தப் பூஜையில் சாய்பாபாவுக்கு பக்தர்கள், 300000 மாத்திரைகள்,பத்தாயிரம் முகக் கவசங்கள்,2000 சானிடைசர் ஆகியவை படைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.இதன் மூலம் மூன்றாவது அலை மக்களை தாக்காமல் இருக்கும் என நம்புகின்றனர்.இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.சாய்பாபாவுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட மாத்திரைகள்,முகக் கவசங்கள் சானிடைசர் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அது சாய் பாபாவின் அருளில் இருந்து வந்தது என நம்பி அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.