அபராதமா? நான் ஏன் செலுத்த வேண்டும்? இந்த கேள்வியினால் அதிர்ந்த ரசிகர்கள்!
கடந்த 2012 ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில், இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அந்த அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்கக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை என்றும் அதை மதிக்கிறோம் என்றும் கூறப்பட்டது. ஆனால் காருக்கு நுழைவு வரி செலுத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விஜய் தரப்பு மேல்முறையீடும் செய்தது. மேலும் இது வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கும் மாற்றப்பட்டது. நுழைவு வரியை கணக்கிட்டுக் கூறுகிறோம். 2012ஆம் ஆண்டு கணக்கின்படி 20 சதவீத வரியை ஏற்கனவே அவர் செலுத்தியுள்ள காரணத்தினால், அது போக மீதியுள்ள 80 சதவீத வரியை மட்டும் அவர் செலுத்தினால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை ஒரு வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என்றும், தனி நீதிபதி கூறிய விமர்சனங்களை நீக்க கூறுவது குறித்து அடுத்த கட்ட விசாரணையில் முடிவு செய்யப்படும் எனவும், நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சொகுசு கார் நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் தனி நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ரூபாய் ஒரு லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்க கூடாது என நீதிபதி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அபராதமாக விதிக்கப்படும் ஒரு லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் கொடுத்து விட்டதாகவும் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.