ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு!

0
127
The athlete who abruptly withdrew from the Olympics! Fans support!
The athlete who abruptly withdrew from the Olympics! Fans support!

ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு!

2016 இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் போட்டியாளர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவின் நான்கு பிரிவுகளிலும் தங்கம் வென்று கொடுத்துள்ளார். இதேபோல அணி பிரிவிலும் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும், புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் 3 முறையும், வாலட் பிரிவில் 2 முறையும் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள்ளார். இதன் காரணமாக சிமோன் பைல்ஸ் உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக கருதப்படுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று அனைவராலும் கணிக்கப்பட்ட நிலையில் 27 ம் தேதி நடைபெற்ற அணி பிரிவு இறுதிப் போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஆல்ரவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக  விளக்கமளித்துள்ளார். அதனை தொடர்ந்து மனம் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அவரது ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரை அமெரிக்காதான் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்க பதக்கங்களை பெற்றதில் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!
Next articleபெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!