அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

0
125

அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக திட்டமிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆலோசனை வழங்கினார்.

இதுதொடர்பாக உரையாற்றிய அவர் வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை உள்ளிட்டவை தேர்தல் நடத்துவதற்கு முக்கியமான அடிப்படைகள். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான சூழ்நிலைகள் இருந்தாலும் பொதுமக்களை முன்னிலைப்படுத்தி முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு எல்லா தரப்பினரையும் உள்ளடக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் நிலுவையில் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததோடு, இன்னும் சில உத்தரவுகளையும் போட்டு இருக்கின்றார் தலைமை தேர்தல் அதிகாரி.நோய்த் தொற்று இருக்கும் சூழ்நிலையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எல்லா வாக்குச்சாவடிகளிலும் அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்குபெற்ற 5 மாநில தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களின் வயது விவரம், நிதி கையிருப்பு, மனிதவள திட்டமிடல், வாக்குச்சாவடி ஏற்பாடுகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உள்ளிட்ட தங்களுடைய மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மிக விரிவாக படக்காட்சிகள் உடன் விளக்கம் அளித்தார்கள். இந்தக் கூட்டத்தில் மூத்த துணைத் தேர்தல் ஆணையர், துணை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

Previous articleவன்னியர் உள் ஒதுக்கீட்டில் சட்ட சிக்கல்? தடுக்க இதை செய்தாக வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
Next articleஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!