தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் இதோ!

0
175

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, உதகை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வரும் 31 ஆம் தேதியிலிருந்து 1ஆம் தேதி வரையில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதேபோல மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!
Next articleபங்கு சந்தை இன்று!! முக்கிய பங்குகள் வீழ்ச்சி!! நிஃப்டி 0.41% உயர்வு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here