மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா?

0
177

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா?

மகாராஷ்டிராமாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 தொகுதிகளை இருந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பாஜக 105 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத கட்சி 54 தொகுதிகளிலும் வென்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இருப்பினும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் இரு கட்சியின் தலைவர்கள் இடையே நடைபெற்ற நிலையில் பாஜகவுக்கு முதல்வர் பதவியும், சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் பதவிகள் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் என்பவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியபோது, ‘மகாராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறினார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

சிவசேனா கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி அமைத்தால் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இரண்டரை வருடங்களுக்கு முதல்வர் பதவியை மாற்றி மாற்றி பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அவர்கள் இது குறித்து கூறிய போது ’தனது தந்தை ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் ஆட்சி அமைந்தால் ஆதித்ய தாக்கரே தான் முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் எப்படியும் மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்று பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அம்மாநிலத்தில் அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

Previous articleபொய்யான செய்தி வெளியிட்டால்… முதல்வர் எச்சரிக்கை!
Next articleஅரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?