கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!! அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!! தல 62 படத்தின் அப்டேட்!!

Photo of author

By CineDesk

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!! அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!! தல 62 படத்தின் அப்டேட்!!

தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவர் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரை இவரின் ரசிகர்கள் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர். அஜித்குமார் கார் பந்தயங்களில் புகழ் பெற்றவராவார். அவ்வபோது இவரின் பைக் ஸ்டண்ட் திறமைகளையும் வெளிப்படுத்துவார்.

இவரின் எளிய குணம் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மைக்கெனவே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவரின் படங்கள் திரைக்கு வரும் பொழுது அது திருவிழா போல் தோற்றமளிக்கும். இந்த அளவிற்கு அவரின் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித் குமார் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அண்மையில் தமிழ் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்த இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இருந்தது. மேலும் அந்த போஸ்டர் பெருமளவில் அஜித் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஏதாவது ஒரு சிறப்பு தினத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. ஆனால் வெளியீடு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் படக்குழு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனை தொட்ந்து அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித் 62 படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்தும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஒரு தகவல் அஜீத் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷமாக அமைந்துள்ளது.