250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!! ஆப்கானிஸ்தான் வெளியிட்ட வீடியோ!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் பயன்படுத்திய மறைவிடம் பாதுகாப்புப் படையினரின் வான்வழி தாக்குதலில் அழிக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசு டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. கந்தர் மாநிலத்தின் ஜெராய் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த போர்களில் குறைந்தது 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந்தனர் என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
#Taliban terrorists hideouts were targeted by #AAF in Zherai district of #Kandahar province yesterday. Tens of #terrorists were killed and wounded as result of the #airstrike. pic.twitter.com/mM1uVyeXMu
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) August 1, 2021
இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் கூறியதாவது, கந்தர் மாநிலத்தின் ஜெராய் மாவட்டத்தில் இருந்த தாலிபான் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் நேற்று குறி வைக்கப்பட்டது. வான்வழி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவத்த்தை வெளியேற்றுவதற்கான இறுதிகட்டத்தில் இருந்தது. இதற்கு மத்தியில் தாலிபான் பயங்கரவாதிகள் முக்கிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததால் இந்த தீடீர் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
தாலிபான் பயங்கரவாதிகள் கிராமப்புற பகுதிகளில் பெரும் பகுதிகளையும், முக்கிய எல்லைகளையும் கைப்பற்றிய பிறகு மாநில தலைநகரங்களை முற்றுகையிட்டனர். நேற்று இரவு அவர்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தர் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட் வெடிகுண்டுகளை வீசினார்கள். தீவிரவாதிகளுக்கு தேவையான விமானங்களை கைப்பற்றுவதற்காக விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்தது மேலும் அவர்கள் ஹெல்மண்ட் மாநிலத்தில் மாநிலத்திற்கு அருகிலுள்ள லஷ்கர் ஹார்ஸ் என்ற மாநிலம் உட்பட குறைந்தது இரண்டு மாநில தலைநகரங்களிலும் கைப்பற்ற நெருங்கிவிட்டது. ஆகையால் இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது