ரிலீசுக்கு முன்பாகவே நல்ல விலைக்கு விற்பனையான முன்னணி நடிகரின் திரைப்படம்!! என்ன படம்னு நீங்களே பாருங்க!!

0
71
Leading actor's movie sold for a good price before its release !! See for yourself what the picture is !!
Leading actor's movie sold for a good price before its release !! See for yourself what the picture is !!

ரிலீசுக்கு முன்பாகவே நல்ல விலைக்கு விற்பனையான முன்னணி நடிகரின் திரைப்படம்!! என்ன படம்னு நீங்களே பாருங்க!!

தமிழகத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் 55-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் 60 வது படமான வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வருடங்களில் இப்படத்தைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் படக்குழு தெரிவிக்காமல் இருந்தது. மேலும் இது குறித்து அஜீத் ரசிகர்கள் முதல்வர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரும் இப்பாடத்தின் தகவல் குறித்து கேட்டு வந்தனர். இதனால் மே மாதம் 1ஆம் தேதி தல அவர்களின் பிறந்த நாள் அன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை மக்களிடையே அதிதீவிரமாக தொடங்கியதன் காரணமாக படத்தின் முதல்பார்வை போஸ்டர் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் தல ரசிகர்கள் மனம் உடைந்தனர். மேலும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஜூலை 11ஆம் தேதி போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இந்த முறை கூறியபடியே ரசிகர்களை ஏமாற்றாமல் தமிழ் சினிமா திரையுலகமே எதிர்பார்த்த வலிமைத்தின் படத்தின் முதல் பார்வை போஸ்டர் பிரம்மாண்டமாக வெளியானது. தற்போது அடுத்த அடுத்ததாக திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் இந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் டிஜிட்டல் ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவேறி உள்ள நிலையில் வலிமை திரைப்படம் அடுத்த மாதம் ஏதாவது ஒரு அரசு விடுமுறை நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

author avatar
CineDesk