அரசியல் வரலாற்றில் கருணாநிதி!

0
171

தமிழக அரசியல் வரலாற்றில் தன்னுடைய பேச்சாற்றலும், அறிவாற்றலாலும்,மிகப்பெரிய புகழ் அடைந்தவர் அயராத உழைப்பாளி, ஆற்றல்மிக்க படைப்பாளி என்று தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி.

தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்று தனியாக தொடங்கினார். 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற தனி அமைப்பை உருவாக்கி அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், போன்ற தலைவர்களை ஏற்படுத்தி திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்ததாக சொல்லப்படுகிறது.

அறிஞர் அண்ணா ஒரு மிகப்பெரிய சிந்தனையாளராக திராவிட முன்னேற்ற கழகத்தை 1949ஆம் ஆண்டு நிறுவினார். அதேபோல தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் ஆக அரசியலில் தனித்தன்மையுடன் இயங்கி 1969ஆம் ஆண்டு மறைந்தார். 1969ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா மறைந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தும் மிகப்பெரிய சுமை கருணாநிதிக்கு அவருடைய 45வது வயதில் வந்து சேர்ந்தது. ஒரு கட்சியின் தலைவராக 50 வருட காலங்கள் தொடர்ச்சியாக இருந்து சாதனை படைத்தார் கருணாநிதி. உலக நாடுகளின் தலைவர்களை அவர் இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சுமார் 62 வருடங்கள் சட்டசபை பணி, 50 வருடங்கள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பதிமூன்று முறை சட்டசபை உறுப்பினர் என தொடர்ச்சியாக கருணாநிதியின் சாதனைகள் நிகழ்ந்த வண்ணமே இருந்தனர். 1969ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டசபையில் கருணாநிதி நிறைவேற்றியதாக சொல்கிறார்கள்.

அதேபோல இட ஒதுக்கீடு கொள்கையை கருணாநிதி நடைமுறைப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறை படுத்தினார் எனவும், 50 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு30 சதவீத இட ஒதுக்கீடும், அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் வன்னியர்களுக்கு அந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை வாங்குவதற்காக அந்த இன மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் மூன்று கடல்களும் ஒன்றாக சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைத்தது மிகப்பெரிய சாதனை என்று சொல்லப்படுகிறது. 1330 குரலுக்கும் ஒரு மிக எளிய முறையில் உரை எழுதி திருக்குறள் உரையாசிரியர்கள் இவர் ஒரு தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்திய துணைக்கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக 5 முறை பணிபுரிந்து சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு ,சமதர்மம், சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும்,, திட்டங்களையும் வகுத்து கொடுத்த கருணாநிதி இந்திய அரசியல் என்ற வானத்தில் மங்காமல் இருக்கின்ற ஒரு ஒளி சுடர் என்று சொல்லப்படுகிறது.