எனக்கு வாழவே பிடிக்கல!! என்னோட உயிர் தோழியை நானே கொன்னுட்டேன்!!

Photo of author

By CineDesk

எனக்கு வாழவே பிடிக்கல!! என்னோட உயிர் தோழியை நானே கொன்னுட்டேன்!!

CineDesk

Updated on:

Let me live !! I had a life partner myself !!

எனக்கு வாழவே பிடிக்கல!! என்னோட உயிர் தோழியை நானே கொன்னுட்டேன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் ஜூலை 24ஆம் தேதி சென்னை அருகே மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கினார். மேலும் அந்த விபத்தின் போது பலத்த காயமடைந்தார். யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் பயணித்த போது அவர்களின் கார் ஒரு டிவிட்டரில் மோதி அருகிலுள்ள குழியில் விழுந்தது. அதைத் தொடர்ந்து அவரது நண்பர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து யாஷிகாவுக்கும் கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தி இணையதளத்தில் வேகமாக பரவியது மேலும் இதனால் யாஷிகாவை பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் யாஷிகாவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரின் உயிர்த்தோழி இறந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று யாஷிகாவிற்கு விஷயம் தெரியவந்தது.இதனால் மிகவும் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சோகமான செய்தியை ஒன்று அளித்துள்ளார்.

 

https://www.instagram.com/p/CSFnQNNIFT2/?utm_source=ig_web_button_share_sheet

அதில் எனக்கு வாழவே விருப்பமில்லை. என் வாழ் நாள் முழுக்க என் தோழியை கொன்ற குற்றம் எனக்குள் இருக்கும். மேலும் என்னை மன்னித்து விடு பாவனி. கண்டிப்பாக உன் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்புகிறேன். நீ என் மேல் எவ்வளவு கோபமாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். உன் குடும்பத்தினரையும் நான் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டேன். நீ என்னை மன்னித்து விடு என்ற கூறியுள்ளார். மேலும் என்னை காப்பாற்றியதற்காக கடவுளிடம் நன்றி கூறுவதா இல்லை உன்னை இழக்க செய்ததற்காக கடவுளை திட்டுவதா என்று தெரியவில்லை. எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் என்னை கண்டித்தவர்களுக்கும் நன்றி என்று மிகவும் எமோஷனலாக பதிவு செய்திருந்தார். அதை பார்த்த நமக்கு கண்கள் கலங்கும் அளவிற்கு இருந்தது. அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் செய்தி இடையில் இணைக்கப்பட்டுள்ளது.