நாம் இருவர் நமக்கு இருவர்!! முத்துராசுவை கொன்றது யார் தெரியுமா?? இவங்கதானு யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டாங்க!!

0
160
The two of us are two of us !! Do you know who killed Muthurasa? Ivankatanu no one would have seen the opposite !!
The two of us are two of us !! Do you know who killed Muthurasa? Ivankatanu no one would have seen the opposite !!

நாம் இருவர் நமக்கு இருவர்!! முத்துராசுவை கொன்றது யார் தெரியுமா?? இவங்கதானு யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டாங்க!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் தற்போது டாப் 5 இடங்களில் இருக்கும் சீரியல்கள் மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தற்போது பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவியில் 2018 ஆம் ஆண்டு முதல் இரண்டு பருவங்களாக ஒளிபரப்பான நாடக தொடர் ஆகும். இதன் முதல் பருவம் மார்ச் 2018 முதல் மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்தது. இதனை அடுத்து இரண்டாம் பருவம் ஜூலை 2002 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தற்பொழுது முத்துராசு கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை அந்த வீட்டில் உள்ளவர்கள் யார் கொலை செய்தனர்? என்ற பரபரப்பு எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தநிலையில் அண்மையில் சில நாட்களாக முத்துராசுவை கொலை செய்தது யார் என்ற மக்களின் கேள்விக்கு விடை தரும் விதமாக விஜய் தொலைக்காட்சி இதுவரை தமிழ் சீரியலில் உருவாக்காத பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பயங்கரமான புரோமோகளை உருவாக்கி மக்களின் எதிர்பார்ப்பை தூண்டி வந்தது.

நிலையில் தற்போது முத்துராசுவை யார் கொன்றனர் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது. அது யார் என்றால் முத்துராசுவின் மனைவி காயத்ரி தான் என்பது பிரோம் அவை வைத்துப் பார்க்கும்பொழுது தெரிகிறது. இந்த கொலையில் ஒழிந்திருக்கும் மர்மம் மற்றும் யார் செய்தார்கள் என்ற கேள்விக்கும் பதில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் போது தான் தெரியவரும். இதற்கிடையில் தயாரிப்பாளர் எந்தவித டுவிஸ்டை ஒளித்து வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அது வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Previous articleCBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!!
Next articleமுக அடையாளத்தை வைத்து சுலபமாக இதை செய்யலாம்! வங்கிகளில் புதிய அறிமுகம்!