புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!
தற்பொழுது தமிழகத்தின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார்.இவர் இளம் தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் தற்போது ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திலும் அதிகளவு தீவிரம் காட்டி வருகிறார்.அதனால் பாஜக கட்சி முன்பைவிட வலுப்பெற்று சுறுசுறுப்புடன் காணப்படுகிறது.புலியை பார்த்து பூனை சூடு போடும் கதைபோல பாஜகவில் இளம் தலைவரை கண்டு காங்கிரஸிலும் ஒரு இளம் தலைவரை இறக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக 2 முதல் 3 ஆண்டுகள் வரை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வேறு தலைவர் நியமிக்கப்படுவார். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ் அழகிரி கடந்த 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றார்.தற்பொழுது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவரை மாற்றி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.இம்முறை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் ஒருவருக்கு மாநில தலைவராக நியமிக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என கூறுகின்றனர்.தற்போதைய நாடாளுமன்ற கூட்டம் நிறைவடைந்ததும் இம்மாதம் இறுதிக்குள் புதிய மாநில தலைவர் அமர்த்தப்படலாம் என்று கூறுகின்றனர்.
இந்த மாநில தலைவர்கள் நியமிக்கும் பட்டியலில் செல்லக்குமார் எம்பி ,மாணிக்கம் தாகூர் எம்பி,கார்த்திக் ,சிதம்பரம் ,ஜோதிமணி எம்பி ,ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இதை தவிர்த்து செயல் தலைவர்களான விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார்,மோகன் குமாரமங்கலம்,மயூரா ஆகியோர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த வரிசை பட்டியலில் கார்த்தி ,சிதம்பரம், விஷ்ணுபிரசாத், வனிதா மற்றும் ஜோதிமணி ஆகியோர் 50 வயதிற்கும் கீழாக உள்ளனர்.இந்த இளம் வயதுடையவர்கள் பதவி அமர்த்த மூத்த தலைவர்கள் வலி விடுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.