இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்! 2ம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்!

0
122

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக, ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கே.எல் ராகுல் உள்ளிட்டோர் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி விக்கெட் எதுவும் எடுக்காமல் 21 ரன்கள் சேர்த்திருந்தது .ரோகித் சர்மா மற்றும் ராகுல் உள்ளிட்டோர் ஒன்பது ரன்களை சேர்த்திருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், இரண்டாவது நாளான நேற்றைய தினம் மாலை மறுபடியும் ஆட்டம் ஆரம்பமானது. ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை மிக சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார்கள். அவ்வப்போது பவுண்டரிகளை பெருகிவிட்டார்கள் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த சமயத்தில் ராபின்சன் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து புஜாரா களம் இறக்கப்பட்டார் எப்படியும் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க ராபின்சன் ஓவரில் அவருக்கு எல்பிடபிள்யூ ஆனது அம்பயர் அவுட் கொடுத்தார். உடனடியாக புஜாரா ரிவ்யூ கேக்க 3வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார். இருந்தாலும் சற்று நேரத்தில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார் புஜாரா.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்து கொண்டிருந்த சூழ்நிலையில், இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த கே எல் ராகுல் அரை சதம் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அவருடைய முதல் ரன் எடுத்து சமயத்திலேயே ரன் அவுட் ஆகி இருக்க வேண்டியது. ஆனால் அதிலிருந்து தப்பித்து 4 ரன்களை எடுத்தார் 5 பந்துகளை மட்டுமே சந்தித்த ரஹானே இறுதியில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிவிட்டார்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இன்றி இருந்த சூழ்நிலையில், 125 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. இந்த சூழ்நிலையில், கேஎல் ராகுல் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட் அவருடைய ஸ்டைலில் விளையாடி வந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய ராகுல் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்தார். அந்த அணி கேட்சை தவற விட்டது. தொடர்ச்சியாக அவர் விளையாடிய சூழ்நிலையில், மேகமூட்டம் காரணமாக, ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மழை காரணமாக, ஆட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

Previous articleபதக்கம் வெல்லுமா? இந்திய பெண்கள் ஹாக்கி அணி பரபரப்பில் இந்திய ரசிகர்கள்!
Next articleவெளியான அதிர்ச்சி செய்தி! வேதனையில் முதலமைச்சர்!