வெளியான அதிர்ச்சி செய்தி! வேதனையில் முதலமைச்சர்!

0
61

சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சுவாச கோளாறு காரணமாக, சென்ற மாதம் 20ஆம் தேதி சேர்க்கப்பட்டார். சென்ற 20 ஆம் தேதியிலிருந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, பாதிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்.

அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரத்திற்கும் ஆளானேன். அவருடைய மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையார் உள்ளிட்டோரின் முழுமையான அன்பை பெற்றவர் மதுசூதனன். அதோடு அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார் அதிமுகவின் அவைத் தலைவராக பணியாற்றி வந்த அவர் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு தமிழகம் முழுவதும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரை அதிமுக எழுந்திருப்பது பேரிழப்பாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆர்கேநகர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியவர் மதுசூதனன் சாதாரண தொண்டர்கள் முதல் அந்த கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர்.ஏழை எளிய மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்கு இறுதி மூச்சு வரையில் இருந்த மதுசூதனன் அவர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அதிமுகவின் தொண்டர்களுக்கும், என்னுடைய அனுதாபத்தையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்.