இன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!!
இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 0.10% என 54,550 க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் என்எஸ்இ நிஃப்டி 50 0.13%உயர்ந்து, 16,300 புள்ளியைத் தாண்டியது. வங்கி நிஃப்டி 0.28%உயர்ந்து 36,000 க்கும் குறைவாகவே இருந்தது.
இந்தியா VIX உயர்ந்து காணப்பட்டது. தொடக்க மணியின் போது பரந்த சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன. இன்று, க்ளென்மார்க் லைஃப் சயின்ஸின் பங்குகள் தலால் தெருவில் அறிமுகமாகும். இந்நிறுவனத்தின் ஐபிஓ கடந்த மாதம் 44.17 மடங்காக இருந்தது. மேலும் இந்நிறுவனம் ரூ .1,513 கோடியை திரட்ட உதவியது.
அதிக லாபத்தை ஈட்டியவர்கள்: (Top Gainers)
இண்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளன. அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் 1% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
அதிக இழப்பை சந்தித்தவர்கள்: (Top Losers)
HCL டெக்னாலஜிஸ், இன்போசிஸ் மற்றும் TCS ஆகியவை சரிவில் இருந்தன.
ஓபனிங் பெல்:
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. ஆதாயங்கள் மற்றும் இழப்புகளுக்கு இடையில் தல்லாடுகின்றன. பரந்த சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன. வங்கி நிஃப்டி 0.26%அதிகரித்துள்ளது. இந்தியா VIX உயர்வில் காணப்படுகிறது.