இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

0
217

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருக்கிறது. தற்சமயம் 20 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleஅதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
Next articleஇன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here