10 பாடல்களை வெளியிடும் வைரமுத்து!! ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பங்கு போட்டுக்கொள்ளும் கவிஞரின் பாடல்கள்!!
கவிதை என்றாலே அது வைரமுத்து தான். வைரமுத்து புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். 1980 இல் வெளியான நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலை முதன் முதலில் எழுதினார். இதைத் தொடர்ந்து ஜனவரி 2009 வரை 5,800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜா பின்னர் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
மேலும் இவர் கலைமாமணி விருது, சாகித்யா அகாதமி விருது, பத்ம பூசன் விருது, சிறந்த தமிழ் திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவரின் இசைக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் சிறத்த பாடலாசிரியருக்கான குடியரசு தலைவர் விருதை 6 முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
இந்த நிலையில் வைரமுத்து ஒரே நேரத்தில் 10 பாடல்களை எழுதியுள்ளாராம். அண்ணா தம்பி ஆகிய இரு இயக்குனர்களுக்கும் என கூறப்படுகிறது. அண்ணன் இயக்குனர் சீனுராமசாமி இவர் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தம்பி இயக்குனர் விஜயகுமார் இவர் அழகிய கண்ணே என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். இரு படங்களுக்கும் ஐந்து பாடல்கள் விகிதம் 10 பாடல்களை தற்போது கவிஞர் வைரமுத்து தான் எழுதி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீனுராமசாமி இயக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறாராம். விஜய்குமார் இயக்கும் படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். எனவே இரண்டு படங்களிலும் வைரமுத்து எழுதிய பாடல் வெளியாக உள்ளது என்ற தகவல் தற்பொழுது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.