தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Photo of author

By Hasini

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 11 வது முறையாக போடப்பட்டு இருந்த ஊரடங்கு இந்த மாதம் 9 ம் தேதி முடியும் தருவாயில் உள்ளதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிப்பது என்றும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்தும் அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் மருத்துவ குழுக்களால் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. மேலும்  வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், கோவில்கள் உட்பட அனைத்து   மத வழிபாட்டு தலங்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் போது நோய் தொற்று தவிர்க்கப்படும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை கூட தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அனைத்து கடைகளிலும், வியாபாரிகள், பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றியும், அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவும், அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.