கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

0
142
Any caste can become a priest! Stalin as the face of Anna!
Any caste can become a priest! Stalin as the face of Anna!

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இரு கட்சிகளும் பலவித அறிக்கைகளை மக்களிடம் கூறினர்.அந்தவகையில் திமுக இம்முறை வெற்றிபெற்றால் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000  வழங்குவதாக கூறினர்.அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கடந்த பத்து வருடங்கள் கழித்து மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார்.பதவியேற்ற அந்நாளிலே முதன்மை வாயிந்த ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.

அதில் மகளிருக்கு இலவச பேருந்து வசதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து மாதம் தோறும் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்றளவும் அமலுக்கு கொண்டு வரவில்லை.கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகளவு காணப்பட்டதால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தனர்.அவ்வேளையில் இத்திட்டத்தினை அமல்படுத்த போதுமான பொருளாதாரம் காணப்படவில்லை.

சமீபத்தில் கூட தற்போது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் தருவது சற்று சாத்தியமற்றது என்பதை தெரிவித்திருந்தனர்.ஏனென்றால் கொரோனா நிவாரண நிதியை மக்களிடம் திரட்டியபோது இதற்கு ஏது பணம் என்பது போல இருந்தது.ஆனால் இன்று கலைஞரின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள்.அதனால் இன்று குடும்ப அட்டை உள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் என பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தீவீரமாக பரவி வருவதால் கருணாநிதியின் நினைவு நாளை பெரிய அளவில் ஏதும் நடத்தவில்லை.அதேபோல இதர திமுக உறுப்பினர்கள்,தொண்டர்கள்  கருணாநிதியின் உருவப்படத்தை அவரவர் வீட்டின் வாசலில் வைத்து அஞ்சலி செலுத்துமாறும் கூறியுள்ளனர்.எவ்வித பெரியளவிலான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு,மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கலைஞரின் நினைவு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

Previous articleகருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் முதலமைச்சர் அஞ்சலி!
Next articleதிமுகவிற்கு தாவிய அதிமுகவின் முக்கிய நிர்வாகி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!