கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!

0
140
Corporation action for 1 lakh people cured by corona!
Corporation action for 1 lakh people cured by corona!

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!

கடந்த ஒரு வருட காலமாகவே நாம் கொரோனாவின் பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். முதல் அலையில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், இரண்டாவது அறையில் பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல்  உயிரை விட்டனர். பல மருத்துவர்கள், பல முன்கள பணியாளர்கள், பல கர்ப்பிணிகள், மருத்துவ பணியாளர்கள் என்று பலரும் உயிரை விட்டனர்.

பல குடும்பங்களில் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் நிற்கதியாய் இருக்கின்றனர். சிலர் சிறு அறிகுறிகள் ஏற்பட்டவுடனே மருத்துவமனைக்கு சென்று தங்களது உயிரை காப்பாற்றியும் கொண்டனர். தற்போது கொரோனா சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்ததன் காரணமாக சென்னையில் இருந்து மட்டும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நபர்களை சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் அவர்களுக்குப் தொடர்புகொண்டனர்.

மேலும் தலைவலி உடல் வலி உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என்பதை தெரிந்துகொண்டு, அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் உளவியல் ஆலோசனைகள், உணவு தொடர்பான சந்தேகங்களும் தொலைபேசி வழியாக மருத்துவர்கள் மற்றும் 150 தன்னார்வலர்கள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 712 நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதில் ஒரு சில நோய் அறிகுறிகளுடன் 5 ஆயிரத்து 874 பேர்களுக்கு விட்மேட் செயலி மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் வீடியோ அழைப்பின் மூலம் டாக்டர்களும் மருத்துவ ஆலோசனையை இலவசமாக வழங்கினர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிபுரிய 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்பாளர்களை வழங்கிய சென்னை தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ரிங்கு மேச்சேரியை பாராட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று சான்றிதழை வழங்கினார். அப்போது உதவி கமிஷனர் பெர்மி வித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Previous articleஸ்கெட்ச் போட்ட திமுக! பக்காவாக ப்ளான் போட்ட முன்னாள் அமைச்சர்!
Next articleஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!