அசராத பெட்ரோல் டீசல் விலை!

0
130

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கடுமையாக அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல் இந்த பெட்ரோல்,, டீசல், விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleடிஎன்பிஎல் கிரிக்கெட்! நாளை தொடங்குகிறது ப்ளே ஆப் சுற்றுகள்!
Next articleஅதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? இன்று வெளியாகப் போகும் வெள்ளை அறிக்கை அதிர்ச்சியில் அதிமுக!