கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

0
93
Check for shop owners! Government's next move!
Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.

இதிலிருந்து மக்களை காப்பாற்ற பல நடவடிக்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகிறது.அந்த நடவடிக்கைகளில் முதலாவதாக,மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்த வைப்பது.அந்தவகையில் கேரளாவில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி வங்கிகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கேரளாவில் தடுப்பூசி செலுத்திருப்பது அவசியம்.அதேபோல நமது தமிழ்நாட்டில் அந்த அளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வராவிட்டாலும்,மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு குறிப்பிடும் போது இன்று முதல் சேலத்தில் மாலை 6 மணிக்கு மேலாக எந்த கடைகளும் செயல்படாது.அதேபோல சந்தைகளும் செயல்பட தடை விதித்துள்ளனர்.இந்த நேரக்கட்டுப்பாட்டினால் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும்.அதேபோல தற்போது நீலகிரி மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா புதிய கட்டுப்பாடு ஒன்றை அமல்படுத்தியுள்ளார்.அது என்னவென்றால்,கடை வைத்து நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.

அப்போது தான் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கடைக்கு வரும் உரிமையாளர்களிடம் இருந்து தங்களை காத்து கொள்ள முடியும்.மேற்கொண்டு தொற்றும் பரவாமல் இருக்கும்.கொரோனா தொற்று தடுப்பூசி போடதவர்களின் கடைகள்,வணிக வளாகங்கள் போன்றவற்றை திறக்க அனுமதி இல்லை என திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.