ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன்தினம் கோல்டன் ஐகான் விருது வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
பிரபல அரசியல் தலைவர்களும் இந்தியாவில் உள்ள திரையுலக நட்சத்திரங்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் அழைத்து கமலஹாசன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு இந்த விருதை மத்திய அரசு இந்த விருதை கொடுத்தது சரிதானா? பாஜகவின் பின்புலமாக செயல்பட்டு வரும் அவருக்கு மத்திய அரசு விருது கொடுத்து இருப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் ரஜினியை பாஜக பக்கம் இழுப்பதற்காகவே இந்த விருது கொடுக்கப்பட்டதாகவும் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்து வருகின்றன
இந்த நிலையில் ஒருவேளை இந்த விருது ரஜினிக்கு பதில் கமலஹாசனுக்கு கொடுத்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? கமலஹாசனுக்கு கோல்டு ஐகான் விருது அறிவிக்கப்பட்டு இருந்தால் ரஜினிகாந்த் முதல் நபராக பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருப்பார். கமலஹாசன் போல் 24 மணி நேரம் கழித்து தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்திருக்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
அதே போல் எந்த ஒரு தொலைக் காட்சிகளிலும் கமல்ஹாசனுக்கு விருது கொடுத்தது ஏன் என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று இருக்காது. அப்படியே நடந்தாலும் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆள் இருந்திருக்காது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.