3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்!

0
134
Today is the last day with over 3 lakh applications!
Today is the last day with over 3 lakh applications!

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்!

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பிளஸ் டூ பொதுத் தேர்வின் முடிவுகள் தாமதமாக வெளிவந்த நிலையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடுவதும் சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் மட்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

பதிவு தொடங்கிய முதல் எட்டு நாட்களிலேயே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவுகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருவதும் தொடர்கிறது. அந்தவகையில் நேற்று வரையிலான தகவலின் படி 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு ஏதும் இல்லாத நிலையில், கடந்த ஆண்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்கள்  என்றும் உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது இருக்கும் சூழ்நிலைகளில், இன்ஜீனியரிங் படிப்புகளை யாரும் மதித்து வேலைக்கு எடுப்பதில்லை. அதன் காரணமாக மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் துறைகளில் சேர மிகவும் விருப்பப் படுகின்றனர். அதன் காரணமாக விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளன.

Previous articleவங்கி கணக்கில் 500 அதிகரிப்பு! இன்று முதல் எடுத்துக் கொள்ளலாம்!
Next articleதொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!