ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்!
நகரத்து மக்கள் முதல் அனைவரும் வேலையை தேடி ஓடுகின்றனர்.அந்தவகையில் அவர்களின் தேவையை முடிந்தவரை டெக்னாலஜி பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்க முயல்கின்றனர்.அதனால் வர்களின் நலன் கருதி இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது நாடு முழுவது உள்ள அனைவரும் தாங்கள் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு நேரம் செலவழிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
அதனால் அவர்களுக்கு அந்த மாறி எந்தவித பிரச்சனைகளும் நடக்காத வண்ணம் அற்புதமான திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.இனி ஓர் போன் கால் செய்தால் போதும் உங்கள் புதிய எரிவாயு இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.ஊராக பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக இந்த திட்டத்தை கொண்டுவந்ததாக இந்தியன் ஆயில் நிறுவனர் எஸ்.எம்.வைத்தியா கூறினார்.அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை பயன்படுத்து மக்கள் அனைவரும் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடியாக உங்களின் புதிய சிலிண்டர் இணைப்பை பெற்று கொள்ளலாம்.மேலும் இந்திய ஆயில் நிறுவனத்தின் http://cx.indianoil .in என்ற இணையத்தில் சென்றும் தங்களின் சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.அதுமட்டுமின்றி மேலும் அதிகப்படியான முறைகளையும் இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்துள்ளது.
75888 88882 என்ற வாட்சாப் மூலமும் தங்களின் புதிய இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.முன்னதாகவே கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றிருந்து இரண்டாவதாக இணைப்பை பெற நினைத்தால் கூட இம்முறைகளை பயன்படுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி 14.2 என்ற சமையல் எரிவாயுவிற்கு பதிலாக 5 கிலோ சிலிண்டர் பெரும் வசதியையும் பெற்று கொள்ளலாம்.பழைய முறைகளில் மக்கள் கால்கடுக்க நின்று படிவங்களை பூர்த்தி செய்து பல நாட்களாக அலைந்து புதிய இணைப்பை பெறுவர்.ஆனால் தற்போது இந்த டெக்னாலஜி திட்டத்தினால் மக்கள் அனைவரும் மிகவும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.