உயிருடன் மீட்கப்பட்ட ஹரியானா சிறுமி: அதன் பின்னர் நடந்த சோகம்!
நேற்று மாலை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்பூரா என்ற பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அவரை மீட்க உடனடியாக மீட்புப்படைகள் களமிறங்கின.
ஆழ்துளை கிணற்றில் இருந்த சிறுமி 50 அடி ஆழத்தில் இருந்ததால் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டிய மீட்புப்படையினர் இன்று காலை உயிருடன் மீட்டனர்.
ஆனால் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிசையின் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததால் ஹர்சிங்பூரா கிராமகே சோகமயமானது
ஷிவானி என்ற அந்த குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இருப்பினும் சிகிச்சையை சிறுமியின் உடல் ஏற்கவில்லை என்பதால் உயிரிழந்துவிட்டதாகவும் டாக்டர் ரவீந்தர் சந்து என்பவர் தெரிவித்துள்ளார்.
ஷிவானி வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் தோண்டிய இந்த ஆழ்துளை கிணறு கடந்த சில மாதங்களாக மூடாமல் இருந்ததாகவும், நேற்று மாலை அந்த பகுதியில் விளையாடிய ஷிவானி தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.