ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

0
159
GSLV F10 did not reach its target while being paid! ISRO leader informed!
GSLV F10 did not reach its target while being paid! ISRO leader informed!

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியின் கண்காணிப்புகாக 2268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ். – 3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்பவெட்ப மாறுதல்களை துல்லியமாக கணித்து கூறப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் ராக்கெட்டுக்கு உந்துசக்தியாக உள்ள, எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிகட்ட பணியான 14 மணி நேர கவுன்டவுன் நேற்று பிற்பகல் 3.43 மணி முதல் தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தொடர்ந்து கவுண்டவுன் முடித்துக்கொண்டு இன்று காலை ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. ஆனால் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Previous articleஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
Next articleஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு!