இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
362

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில், 26ஆவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleநோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here