இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. சூழலில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகரில் இருக்கின்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றையதினம் ஆரம்பமானது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்தியாவின் ரோகித் சர்மா ,கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களம் புகுந்தார். இந்திய அணி 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது.
மிகவும் பொறுப்புடன் துல்லியமாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் கண்டார். மிகவும் நிதானமாக கே.எல். ராகுல் விளையாடினார் அணியின் ரன்கள் 126 ஆக இருந்த சமயத்தில் ரோகித்சர்மா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் இந்த ஜோடி 126 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார், அதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக விளையாடினார். இன்னொரு முனையில் நிதானமாக நின்று விளையாடிய கே எல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஜோடி 117 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் விராட் கோலி நாற்பத்தி இரண்டு ரன்னில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரகானே களம் இறங்கி ஒரு ரன் எடுத்து இருக்கிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 274 சேர்த்திருக்கிறது கேஎல் ராகுல் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் சார்பாக ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் மற்றும் ராபின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.