வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டி! 34 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்!

0
123

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் ஐம்பத்தி ஆறு ரன்களும், அஷ்ரப் 44 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் சேர்த்தார்கள்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக அந்த அணியின் போல்டர்ஸ் 3 விக்கெட்டுகளும் ,2 விக்கெட்டுகளும், சாய்த்தார்கள் இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடிய தை முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்களை சேர்த்தது.

இந்த சூழ்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது தொடக்க ஆட்டக்காரர் பிராட் வைட் நிதானமாக விளையாடினார், இன்னொருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது.100 ரன்களை நெருங்குவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை பறி கொடுத்து தத்தளித்து வந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹோல்டர் பிராட் வைட் அவர்களுடன் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்க்க தொடங்கினார்கள். இரண்டு பேரும் அரைசதம் கடந்தார்கள் ஹோல்டர் 58 ரன்னில் அவுட்டானார் .சதம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னொரு பேட்ஸ்மேனான பிராட் வெயிட் அவர்களும் 97 ரன்னில் நடையை கட்டினார்.

கடைசியாக இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை எடுத்து இருக்கிறது. ஜோஷ்வா சில்வா 20 ரன்னுடன் களத்தில் இருக்கின்றார். இதன் மூலமாக பாகிஸ்தான் அணியை விட 34 ரன்கள் முன்னிலை பெற்றது .பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சார்பாக பாஸ் 3 விக்கெட்டும் ஆப்ரிடி 2 விக்கெட்டும் எடுத்திருக்கிறார்கள்.

Previous article“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!
Next articleகாலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்!