“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!

0
92

கொரோனாவை தடுப்பதற்காக கோவாக்ஸ்சின் மற்றும் கோவிசீல்டு என இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்பொழுது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று போலியான தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் இரண்டையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனா வாலா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரே தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்வது நடைமுறையில் உள்ளது.உத்திரபிரதேசத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பற்றி மருத்துவ கவுன்சில் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் மூலம் இருவேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்ட 300 பேரை பரிசோதனை செய்யும்படி வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கவுன்சிலுக்கு வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரிக்கு, இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஜெனரல் சமீபத்தில் அனுமதி அளித்தது.

இதனால் கோவிஷில்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனாவாலா இருவேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்வது என்பது தவறான ஒன்று தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அப்படி செலுத்தி கொள்ளும் பொழுது மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சீரம் தயாரிப்பின் மீது மற்றொரு தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் குற்றம் சாட்டும் படி வரும்.இதே முடிவை நாங்களும் எடுக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல் இருவேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்வதற்கான அவசியம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் பலன் கிடைக்கும் என பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை, எனக் கூறினார்.

 

author avatar
Kowsalya