நோய் தொற்று காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை குறித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 2021 இருபத்தி இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் தற்சமயம் இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாலும், இணையதள வகுப்புகளில் சரியாக பாடங்களை கற்றுக் கொள்ள இயலாததால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக தெரிவிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல் இணையதளத்தில் அனைத்து படங்களையும் நடத்துவது கால விரயத்தை அதிகரிப்பதுடன் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக சென்ற வருடத்தில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது அதேபோல இந்த வருடமும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டிருக்கின்ற அரசாணையை ஒன்றில் நோய்த்தொற்று காரணமாக, மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு களுக்கு ஐம்பத்தி ஒரு சதவீதமும், ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு களுக்கு 54% ஒன்பதாம் வகுப்புக்கு 65 சதவீதமும், பத்தாம் வகுப்பிற்கு 60 சதவீதமும், பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு 60- 65% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களுடைய கற்றல் திறன் மற்றும் எதிர்கால படிப்புகளுக்கு தேவையான பாடங்கள் குறைக்க படாமல் மற்ற பாடங்களின் தகவல்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. செயல்படும்போது 45 முதல் 50 நாட்களுக்கு அனைத்து வகுப்புகளுக்கும், புத்தாக்க வகுப்புகள் இணைப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.