காங்கிரசின் புதிய யுக்தி! தமிழகத்தின் முக்கிய பங்கு!
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்து வருகிறது.காங்கிரஸ் கட்சி மத்தியில் இதுவரை ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும்.சோனியா காந்தி இந்த கட்சியின் தலைவராக செயல்படுகிறார்.இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியாவார்.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்த இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது.அதற்காக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் எதிரணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுருக்கிறது காங்கிரஸ் கட்சி.மத்தியில் ஏழு வருடமாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை பல செயல்களில் ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
இதனிடையே தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெகாசஸ் என்கிற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றாக நின்று தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது.மக்கள் நலனுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியும் வருகிறது.காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த மாதம் 20ம் தேதி எதிர்க்கட்சிகளுடனும்,ஒருமித்த கருதுக்கள் உள்ள கட்சிகளுடனும் பேச்சவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி,ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.