வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்!

0
152
New update for WhatsApp users! Let's see now!
New update for WhatsApp users! Let's see now!

வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்ரைடு மொபைல் உபயோகித்து வருகின்றனர்.இந்த சூலில் மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சுப நிகழ்சிகள் முதல் மனதை உலுக்கும் நிகழ்சிகள் வரை அவர்களது உணவுர்களை ஸ்டேடஸ் மூலம் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.அந்த உணர்வுகளை பேஸ்புக்,ட்விட்டர்,வாட்சாப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் தங்களின் நிலையை சொல்ல ஓர் மேடையாகவும் இது உள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் நல்ல காரியங்களுக்கும் பயன் தர வகையில் தான் உள்ளது.சில சமையங்களில் தீய காரியங்களுக்கும் இது வழி செய்து விடுகிறது.நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அனைத்தும் உள்ளது.சில மாதம் முன்பு தான் வாட்சாப் நாம் உபயோகம் செய்ய வேண்டுமென்றால் அது கூறும் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஒன்று,பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

ஏனென்றால் வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியதால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் நாங்கள் அறிந்து கொள்வோம் என்ற கட்டுப்பாட்டை கூறியது.பலக்கோடி மக்கள் வாட்சாப் உபயோகம் செய்ததால் அந்த கட்டுபாட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை.நீதிமன்றம் வரை அது பற்றிய வழக்கு தொடரப்பட்டது.அது ஓர் பக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது வாட்சாப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் இனி ஸ்டேடஸ் பார்க்க வேண்டுமென்றால் அவர்களின் ப்ரோபைல் பிக்சரை கிளிக் செய்தால் போதுமானது.அதாவது,நாம் பார்க்க நினைப்பவர்களின் ப்ரோபைலை கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு கிளிக் செய்ததும் அது இரண்டு விருப்பங்கள் கேட்கப்படும்.அந்த விருப்பங்களில் ஒன்று உங்களுக்கு ப்ரோபைல் பார்க்க வேண்டுமா என்பது ஒன்று,உங்களுக்கு ஸ்டேடஸ் பார்க்க வேண்டுமா என்பது மற்றொன்று ஆகும்.

இதில் உங்களுக்கு தேவையான ஒன்றை கிளிக் செய்து இனி பார்த்து கொள்ளலாம்.இந்த அப்டேட் ஆனது ஆன்ரைடு பீட்டா வில் 2.21 17.5 என்ற வாட்சாப்பில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த அப்டேடானது அனைத்து வாட்சாப் பயனர்களுக்கும் எப்பொழுது பயன்படுத்தப்படும் என கூற வில்லை.தற்பொழுதைய புதிய அப்டேட் iOS  உபயோகம் செய்யும் பயனர்கள் தாங்கள் பேசும் வாட்சாப் சாட்களை ஆன்ரைடு மொபைலிற்கு மாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.கூடிய விரைவில் இந்த புதிய அப்டேட் வெளிவரும் என WABetaInfo அறிக்கையில் தெரிவித்துள்ளது,

Previous articleஎல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!
Next articleமீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!