சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!
நடிகை மற்றும் மாடல் அழகியான மீரா மிதுன் பற்றி நாம் அறிந்ததே. இவர் தன் பொழுது போக்கிற்காகவும், தன்னை பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சிலரை துச்சமென பேசி வீடியோ பதிவிடுவார். அதன் மூலம் பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர் பிக் பாஸ்ஸிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பொழுது போக்கிற்காக செய்தது அவருக்கே வினையாகி போனதும் குறிப்பிடத் தக்கது.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து, அதன் அடிப்படையில் அவர் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மீராமிதுன் வெட்டி பந்தாவிற்காக வீராப்பு பேசியவர், போலீஸ் தேடுகிறது என்று தெரிந்த உடன் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்று தேடிய போலீசாருக்கு அவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்று மீராமிதுன் இருந்த இடத்தை அடைந்து அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது திடீரென அந்த நடிகை தனது செல்போனில், என்ன செய்வதென்று பதட்டத்தில் வீடியோ பதிவு ஒன்றை செய்ய ஆரம்பித்தார். இவர்கள் என்னை கைது செய்ய வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடக்க வேண்டுமா? என்னை கைது செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எல்லாம் மிரட்டி வீடியோவில் பேசி அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.
ஆனால் போலீசாரோ இது எதையுமே கண்டுகொள்ளாமல், பெண் போலீசார் உதவியுடன் அந்த நடிகையை கைது செய்தனர். அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வர இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் போலீஸ் வாகனம் மூலமாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு உள்ளார்.
தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பட்டியலினதவரை இழிவாக பேசியது தொடர்பாக வீடியோக்களை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்கள். இந்த விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பிறகு அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.