சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று ஒரு பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பெண் இறந்த நிலையில் இருப்பதாகவும் வீடியோ மூலம் தெரியவருவதாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
இந்த வீடியோ வட மாநிலங்களில் உள்ள செய்தி ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. ஆனால் இது எங்கு நடந்தது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அதேப்போல் இது டிவிட்டரிலும் இந்த வீடியோ மிகவும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த சம்பவம் வெவ்வேறு பகுதியில் நடந்ததாக தெரிவித்துள்ளனர் .ஆனால் உண்மையில் இது நடந்த இடம் மெக்ஸிகோ.
சுற்றுலா சென்ற பெண் செல்பி எடுக்க முயன்றதால் முதலையிடம் சிக்கியிருக்கலாம், என்று பல்வேறு கட்டுக்கதைகள் உலா வந்தாலும் உண்மையில் ஜூன் 21 தேதி மெக்சிகோவில் லகுனா டெல் கார்பின்டேரு டம்பிகோவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .
இந்த பயங்கரமான சம்பவத்தை மெக்சிகோவில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ள டெய்லி போஸ்ட் என்ற பத்திரிக்கையில் அந்தப் பெண் லகுனா டெல் கார்பின்டேரு டம்பிகோவில் கரையின் ஓரமாக துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த பொழுது முதலையால் கொல்லப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இறுதியில் முதலில் தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.