3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

0
127
Startling information about the 3rd wave! Announcement by Ames!
Startling information about the 3rd wave! Announcement by Ames!

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் ஆறு மாதம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் பாமர மக்கள் தன்கள் வாழ்வாதாரம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு போடப்படும் சூழலில் மக்களுக்கு உதவியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும்,அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.

அதனையடுத்து இந்த கொரோனா தொற்று சீன நாட்டிலிருந்து ஆரம்பித்திருந்தாலும்,அனைத்து நாடுகளுக்கும் அதிகளவு பாதிப்பை தந்தது.அதுமட்டுமின்றி இது முடிவில்லாமல் முதல் அலை,இரண்டாம் அலை மற்றும் தற்போது மூன்றாம் அலை என பரவிக்கொண்டே செல்கிறது.அந்தவகையில் பார்க்கும் போது முதல் அலையில் இந்தியாவில் மக்கள் அதிகளவு பாதிக்கப்படவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் வட இந்தியா முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.

தற்போது இரண்டாம் அலையை கடந்து மூன்றவது அலை வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.அந்தவகையில் பார்க்கும் பொழுது மூன்றாவது அலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினர்.மருத்துவ நிபுணர்கள் கூறியதை மக்கள் விழிப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.ஆனால் மூன்றாவது அலை அதிக தாக்கத்தை தர கூடியது என ஓர் பக்கம் மக்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் பலவற்றை இவ்வாறு தங்களுக்குள்ளேயே கூறி வருவதால் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் ஓர் பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியதாவது,வருங்காலங்களில் கொரோனா தொற்று எந்த அளவிற்கு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.ஆனால்.இரண்டாவது அலையை போன்று மூன்றாவது அலை மிக மோசமாக இருக்காது.மக்கள் தற்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அதனால் மூன்றாவது அலையிலிருந்து அவர்களுது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்.இந்த மூன்றாவது அலையில் அதிகப்படியாக குழந்தைகள் பாதிக்கப்படுவார் என்று மக்கள் கூறுகின்றனர்.ஏனென்றால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.ஆனால்,குழந்தைகளுக்கு தற்பொழுது வரை எந்தவித தடுப்பூசியும் வரவில்லை.

அதனால் அவர்களுக்கு மூன்றாவது அலையில், தொற்று பாதிப்பு உண்டாகும்.தற்போதே 50 சதவீதம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என செரோ ஆய்வறிக்கையில் கூறி இருப்பதாக அவர் திடுக்கிடும் தகவலை கூறினார்.மேலும் குழந்தைகளுக்கென்று தடுப்பூசி வரும் மாதங்களில் கிடைத்து விடும் என்று கூறினார்.அதுமட்டுமின்றி அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Previous articleமேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!
Next articleஅதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி “சஸ்பெண்ட்