என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் ஜரீபா கபாரி.இவர் 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேயராகப் பதவி ஏற்றார்.இவர்தான் அந்நாட்டிலேயே இளம்வயதில் மேயர் பதவி ஏற்றவரும்கூட.ஆப்கனில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றித் தன்வசம் ஆக்கிகொண்டனர்.
இதனிடையே ஜரீபா கபாரி நான் தாலிபான் ராணுவதிற்க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் கொல்லப்போகிறார்கள்.அதற்கு அவர் தயாராகிவிட்டதாகவும் கூறுகிறார்.மேலும் அவர் தன் கணவருடனும் குடும்பத்தினருடனும் அமர்ந்திருப்பதாகவும் தன்னை போன்ற மக்களையும் குடும்பத்தினரையும் தாலிபான்கள் கொள்ளப்போகிறார்கள் எனவும் அவர் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்புதான் அவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து கொண்டிருப்பதாகவும் மேலும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தாலிபான்களின் ஆதிக்கம் இனி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்நாட்டு மக்கள் பலரும் அச்சம் கொள்கின்றனர்.முன்னதாக ஜரீபாவிற்கு தாலிபான்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.ஜரீபாவின் தந்தை தாலிபான் இராணுவத்தினரால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடானது தாலிபான்கள் ஜரீபா மீதான கொலை முயற்சிக்கு அடுத்து மேற்கொள்ளப்பட்டது ஆகும்.இவரை கொலை செய்ய முயற்சித்த 20 நாட்களுக்கு பின்னர் நிகழ்த்திய வன்முறைச் சம்பவமாகும்.இதற்கு முன்பே ஜரீபாவை தாலிபான்கள் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.இனி வரும் காலங்களில் தாலிபான்கள் ஜரீபாவை கொலை செய்ய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.இந்த நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டே ஜரீபா இவ்வாறு கூறியுள்ளார்.