உங்களுக்கு தெரியுமா? இவருக்கும் கோவில் கட்ட ஆள் இருக்கிறார்கள்! அதிசயம் தான்!
இவரை உலகமே வாய்க்கு வந்தபடி பேசி வருகிறது. ஆனால் இவரோ யார் பேசினால் எனக்கென்ன? என்பது போல் உள்ளார். இது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருக்கு இப்படி ஒரு கோவில் கட்டும் பக்தரா? என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு தொண்டன் உள்ளார் என்று ஒருவர் காட்டி உள்ளார்.
புனேவில் அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான 37 வயது மயூர் முண்டே என்பவர் கட்டியுள்ளார். மேலும் கோவிலில் மார்பளவிலான மோடியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறும் போது பிரதமர் மோடி பதவிக்கு வந்தபிறகு நாட்டில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். தீர்க்க முடியாத பிரச்சனைகளே வெற்றிகரமாக அவரே கையாண்டு உள்ளார். அதிலும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கோரிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியுள்ளார். மேலும் ராமர் கோயில் கட்டுவது, முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது என எல்லாவற்றையும் செய்துள்ளார்.
மேலும் இந்த விசயங்களில் அவர் தொடர்ந்து வெற்றியும் கண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி வரும் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருக்கே கோவில் கட்டுவது சரி எனப்பட்டது. எனவே எனது சொந்த இடத்திலேயே, சொந்த செலவில் சிறிய அளவிலான கோயிலை கட்டியுள்ளேன். இதற்கு மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் செலவாகியுள்ளது. மேலும் மோடியின் மார்பளவு சிலை மற்றும் கோயில் கட்ட சிகப்பு பளிங்கு கற்கள் ஆகியவற்றை ஜெய்ப்பூரில் இருந்து வாங்கி வந்தேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.