நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

0
163

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்ததன் காரணமாக, கர்நாடகாவில் இருக்கின்ற கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது.

இதன் காரணமாக, அந்த அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்சமயம் 7 ஆயிரம் கன அடி மட்டுமே காவிரியில் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்றையதினம் 4 ஆயிரத்து 379 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றைய தினம் மேலும் சரிந்து நான்காயிரத்து 23 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது. நேற்றைய தினம் 69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி குறைந்து 68.09 அடி ஆக இருக்கிறது.

Previous articleஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!
Next articleஅதிரடியாக குறைந்த டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!