அதிரடியாக குறைந்த டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
122

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தடுப்பதற்காக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது..இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு காரணமாக, ஒரு சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல், ஒரு லிட்டருக்கு 99 ரூபாய் 47 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சென்னையில் இன்றைய தினம் ஐந்தாவது தினமாக பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் rs.99 47 காசுக்கும், டீசல் விலையில் 19 காசுகள் குறைந்தது 94 ரூபாய் 20காசுக்கு,ம் விற்பனை செய்ய பட்டு வருகிறது.