பொய் சொன்ன இயக்குனர் செல்வராகவன்! அதிர்ச்சித் தகவல்!

0
182
Selvaraghavan told lie about movie budget
Selvaraghavan told lie about movie budget

பொய் சொன்ன இயக்குனர் செல்வராகவன்! அதிர்ச்சித் தகவல்!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் செல்வராகவன்.இவர் காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர்.திரைப்பபடங்கள் இயக்குவதில் தனிக்கென தனி பாணியை அமைத்து அதில் வெற்றியும் பெற்றவர் செல்வராகவன்.இவரின் திரைப்படங்களில் கதையுடன் சேர்ந்து இசையும் சிறப்பாக இருக்கும்.பெரும்பாலும் இவர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பார்.

இவரின் படங்களில் பெரும்பாலும் காதல் கதைக்களங்கள் அதிகமாக இருக்கும்.செல்வராகவன் தன் தம்பி நடிகர் தனுஷை வைத்து இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன.காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் இதில் அடங்கும்.இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரிய அளவில் படமாக்கப்பட்டது.பல நடிகர்களை வைத்து இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பார்.

மேலும் புதியக் கதைக்களத்தை மையமாய் வைத்து இவர் இந்தப் படத்தை இயக்கினார்.நடிகர் கார்த்தி கதாநாயகனாக இதில் நடித்திருப்பார்.ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா நாயகிகளாக நடித்திருப்பார்கள்.இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருப்பார்.முதல் முறையாக இந்தப் படத்தில் செல்வராகவனுடன் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்திருப்பார்.இந்த திரைப்படத்தில் பின்னணி இசை பெருமளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

2010ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்தத் திரைப்படம் வெளியாகி பல விமர்சனங்களுக்கும் பாராட்டுக்கும் உள்ளானது.மேலும் இந்த படம் நீண்ட நேரம் கொண்டது.இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ஆர்.ரவீந்திரன் ஆவார்.இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குனர் செல்வராகவன் தற்போது வெளியிட்டிருக்கிறார்.இந்தத் திரைப்படம் 32 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக படம் வெளியானபோது அறிவித்தது பொய்யான தகவல் என்றும் மக்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தவே அவ்வாறு அறிவித்ததாக செல்வராகவன் கூறினார்.மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 18 கோடியில் மட்டுமே உருவானது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படம் எடுக்கவுள்ளதாகவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று செல்வராகவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Previous articleநாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்!
Next articleதனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா?