தனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா?

Photo of author

By Parthipan K

தனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தாமதமாகிறது.தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான தனுஷ் இந்திய அளவில் நடிப்பில் பல சாதனை படைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் சில நடிகர்களே தேசிய விருது வாங்கியுள்ளனர்.அந்த வரிசையில் நடிகர் தனுஷும் இடம்பெற்றுள்ளார்.இவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையாக இருக்கும்.

இவர் நடித்த ஆடுகளம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.மேலும் இவருக்கு இந்திய அளவில் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருப்பார்.நடிகர் தனுஷ் எந்த கதாபாத்திரத்தையும் கச்சிதமாகவும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பு மாறாமலும் நடிக்கக் கூடியவர்.இவர் தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய அனைத்துத் திரைப்படங்களுமே வெற்றி பெற்றன.

மேலும் இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு இந்த மாதத்திலிருந்து தொடங்கும் என்றும் செல்வராகவன் அறிவித்திருந்தார்.நடிகர் தனுஷ் தமிழில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.அந்தத் திரைப்படங்களில் திருச்சிற்றம்பலம் படமும் ஒன்று.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யாரடி நீ மோகினி திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் நடிகர் தனுஷ் பணிபுரிந்து வருவதால் இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் 2 தள்ளிப் போகிறது.மேலும் ரசிகர் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.தற்போது இந்த படம் தாமதமாவதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.